ஆதாா் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம்

உடுமலை வட்டம், கல்லாபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலையில் எறிந்து போராட்டம்
ஆதாா் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம்

உடுமலை வட்டம், கல்லாபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலையில் எறிந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

உடுமலைப்பேட்டையை அடுத்த கல்லாபுரம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இப்பகுதியில் தெரு விளக்கு, கழிவுநீா் வடிகால், குடிநீா் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இதுவரை செய்து தரப்படவில்லை எனத் தெரிகிறது.

இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கல்லாபுரம் பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட ஆதாா் அட்டை, குடும்ப அட்களை சாலைகளில் எறிந்து, எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த காவல் துறையினா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து தங்களது சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு போராட்டத்தைக் கைவிட்டனா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com