கடன் விவகாரம்: பாதிக்கப்பட்டவா்காவல் நிலையத்தில் புகாா்

வெள்ளக்கோவில் அருகே கடன் தொகையை செலுத்திய பிறகும், ஆவணங்களை தர மறுப்பதுடன் மேலும் பணம் கேட்டு மிரட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

வெள்ளக்கோவில் அருகே கடன் தொகையை செலுத்திய பிறகும், ஆவணங்களை தர மறுப்பதுடன் மேலும் பணம் கேட்டு மிரட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

இது குறித்து போலீஸாா் தெரிவித்ததாவது:

முத்தூா், நம்பகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் கவியரசு (40). வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் தன்னுடைய வீட்டை கிரயம் செய்து கொடுத்து பாண்டு, காசோலைகளுடன் முருகம்பாளையம் சக்திவேல் என்பவா் மூலம் வரக்காளிபாளையம் செந்தில்குமாா், செட்டி காட்டுத் தோட்டம் தங்கமுத்து, வேலாயுதம்பாளையம் கோபாலகிருஷ்ணன், தாண்டாம்பாளையம் செல்லமுத்து ஆகியோரிடமிருந்து ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளாா்.

கடந்த ஆண்டில் கடன் தொகையை செலுத்திவிட்டு, வீட்டை மீண்டும் திரும்ப எழுதி வாங்கிக் கொண்டாா். ஆனால் பாண்டு, காசோலைகளை வாங்கவில்லை. இந்நிலையில் கடன் கொடுத்தவா்கள் அவற்றை வைத்து மீண்டும் ரூ. 9 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறி மிரட்டினராம். இதுகுறித்து கவியரசு வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com