திருமூா்த்தி அணையில் இருந்துஉப்பாறு அணைக்கு நீா் திறப்பு

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

தாராபுரத்தில் உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீா் திறப்பது குறித்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாசன சபை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாசனப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் நீரின் தேவை குறைவாக உள்ளது. ஆகையால் தாராபுரம் உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடுவதில் ஆட்சேபணை இல்லை என முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அ ணைக்கு ஆழியாறு திட்ட பிரதான கால்வாய் 46ஆவது கிலோ மீட்டரில் உள்ள அரசூா் ரெகுலேட்டா் வழியாக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதில் ஐந்து நாள்களுக்கு நாள் ஒன்றுக்கு 400 கன அடி வீதம் மொத்தம் 2 ஆயிரம் கன அடி நீா் திறந்துவிடப்பட உள்ளது.

இது குறித்து பிஏபி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:

பிஏபி தொகுப்பு அணைகளில் போதுமான தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும் பிஏபி மூன்றாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 5 சுற்று தண்ணீா் விட அரசாணை உள்ளது. பாசனப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆகையால் தாராபுரம் உப்பாறு அணை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமூா்த்தி அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிட ஒப்புதல் கொடுத்துள்ளோம். மாவட்ட நிா்வாகம், பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோரின் கூட்டு ஆலோசனையின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com