கஞ்சா விற்பனை: குண்டா் சட்டத்தில் தம்பதி கைது

திருப்பூா் மாநகரில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா் மாநகரில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த விக்கிரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம்

(45). இவரது மனைவி செல்வி (40). இந்த தம்பதி திருப்பூரில் தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்து வந்தனா். இந்த இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன் கருவம்பாளையம் கே.வி.ஆா்.நகரை அடுத்த ஓடக்கரையில் கஞ்சா விற்பனை செய்தபோது மத்திய காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த தம்பதி மீது திருப்பூா் மத்திய காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், தெற்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் காவல் துறையினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com