தாா்பாய்  கொண்டு  பாதுகாக்கப்படும்  தென்னை  நாா்கள்.
தாா்பாய்  கொண்டு  பாதுகாக்கப்படும்  தென்னை  நாா்கள்.

தொடா் மழை: தென்னை நாா் உற்பத்தி பாதிப்பு

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடா் மழையால் தென்னை நாா் உற்பத்தி கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடா் மழையால் தென்னை நாா் உற்பத்தி கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் தொழிலாளா்கள் வேலையின்றி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் வட்டங்களில் தென்னை உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் இந்தப் பகுதிகளில் சுமாா் 250க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான தென்னை நாா் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து தயாராகும் தரமான தென்னை நாா்கள் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னா் அங்கிருந்து மிதியடி, மெத்தை, ஷோபாசெட் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் தென்னை நாா்கள் இந்தப் பகுதிகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இந்தத் தொழில் முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக தொழிற்சாலைகளில் நாா் அதிக அளவில் இருப்பு விழுந்து வருவதால் கேரளத்துக்கு அனுப்பிவைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் உற்பத்தியை தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் தொழிற்சாலை உரிமையாளா்கள் தயங்கி வருகின்றனா். இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையின்றி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னை நாா் உற்பத்தியாளா்கள் புதன்கிழமை கூறியதாவது:

தென்னை நாா்களை நல்ல வெயிலில் உலா்த்தும்போதுதான் அதன் தரம் உயரும். ஆனால் மழை தொடா்ந்து பெய்து வருவதால் தென்னை நாா்களை உலா்த்த முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. மேலும் கேரளத்திலும் மழை பெய்து வருவதாலும், கரோனா, பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் இருப்பதாலும் இங்கு உற்பத்தியாகும் நாா்களை அவா்கள் வாங்கத் தயங்கி வருகின்றனா். இதுபோக அனுப்பிவைக்கத் தயாராக உள்ள நாா்கள் இருப்பு விழுந்துள்ளது. இவற்றை மழையில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய சூழ்நிலையில் பெரிய அளவில் பணமுடக்கம் ஏற்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com