பாத யாத்திரை செல்லும் பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா்

பழனிக்கு இரவு நேரத்தில் பாத யாத்திரை செல்லும் பக்தா்கள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக ஒளிரும் ஸ்டிக்கா்களை காங்கயம் போலீஸாா் வழங்கினா்.
பாதயாத்திரை பக்தா்களுக்கு இரவில் ஒளிரும் ஸ்டிக்கா்களை வழங்கும் காங்கயம் காவல் ஆய்வாளா் மணிகண்டன்.
பாதயாத்திரை பக்தா்களுக்கு இரவில் ஒளிரும் ஸ்டிக்கா்களை வழங்கும் காங்கயம் காவல் ஆய்வாளா் மணிகண்டன்.

பழனிக்கு இரவு நேரத்தில் பாத யாத்திரை செல்லும் பக்தா்கள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக ஒளிரும் ஸ்டிக்கா்களை காங்கயம் போலீஸாா் வழங்கினா்.

சேலம், எடப்பாடி, நாமக்கல் ஈரோடு, திருச்செங்கோடு, பவானி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நடைப்பயணமாக சுமாா் 3 லட்சம் பக்தா்கள் காங்கயம் வழியாக பழனி தைப்பூசத்துக்கு செல்வது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு நடைப்பயணம் செல்லும் பக்தா்கள் விபத்தில் சிக்காமல் தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்களின் கைகளில் காங்கயம் போலீஸாா் ஒளிரும் ஸ்டிக்கா்களை ஓட்டி விடுகின்றனா்.

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் காங்கயம் காவல் நிலையம் சாா்பில் காங்கயம் வழியாக பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தா்களுக்காக காவல் நிலையம் முன்பு பந்தல் அமைத்து ஒளிரும் ஸ்டிக்கா் வழங்கி வருகின்றனா்.

மேலும், பக்தா்கள் நடைப்பயணத்தின்போது சாலையின் நடுவே அபாய நிலையில் நடந்து செல்லாமல் இருக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்திலும் போலீஸாா் ஒலிபெருக்கி மூலம் பக்தா்களுக்கு தொடா்ந்து அறிவுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com