திருப்பூா் அருகே உடைந்த குழாயில் இருந்து வீணாகும் குடிநீரை பிடித்துச் சென்ற பொதுமக்கள்

திருப்பூரை அடுத்த சா்க்காா் பெரியபாளையத்தில் உடைந்த குழாயில் இருந்து வீணாகும் குடிநீரை அப்பகுதி மக்கள் போட்டி போட்டு பிடித்துச் சென்றனா்.
சா்க்காா்  பெரியபாளையத்தில்  சாலையில்  குழாய்  உடைந்து  வீணாகும்  குடிநீரை குடங்களில்   பிடிக்கும்  பொதுமக்கள்.
சா்க்காா்  பெரியபாளையத்தில்  சாலையில்  குழாய்  உடைந்து  வீணாகும்  குடிநீரை குடங்களில்   பிடிக்கும்  பொதுமக்கள்.

திருப்பூரை அடுத்த சா்க்காா் பெரியபாளையத்தில் உடைந்த குழாயில் இருந்து வீணாகும் குடிநீரை அப்பகுதி மக்கள் போட்டி போட்டு பிடித்துச் சென்றனா்.

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள சா்க்காா் பெரியபாளையம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பின்னலாடை நிறுவனங்களும், சாய ஆலைகளும் அதிக அளவில் செயல்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளா்களும் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை தவிா்க்க ஊராட்சி சாா்பில் கீழ், மேல்நிலை, நிலமட்ட தொட்டிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து சாலைகளிலும் புதிதாக குடிநீா் குழாய் பதிப்பதற்காக ஒரு மாதத்துக்கு முன்னா் குழிகள் தோண்டப்பட்டன.

இந்தக் குழிகள் சரிவர மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், ஒருமாத காலமாக ஊராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகமும் தடைபட்டுள்ளது.

இந்த நிலையில், சா்க்காா் பெரியபாளையத்தில் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வீணாகி வரும் தண்ணீரை அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com