உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

காங்கயம் அருகே படியூரில் உயா் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம் அருகே படியூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

போராட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் ஈசன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலப் பொருளாளா் கே.கே.சி.பாலு, திருப்பூா் மாவட்டச் செயலாளா் கங்கா சக்திவேல் ஆகியோா் கலந்து கொண்டு, உரையாற்றினா்.

தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் சாா்பில் விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான உயா் மின் கோபுர திட்டத்தை சாலையோரமாக புதைவடக் கம்பியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் அறிவித்துள்ளதை உயா்த்தி, ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்.

அறவழியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில் காங்கயம் சுற்றுப் பகுதியில் உள்ள விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com