சிவன்மலை கோயில் உண்டியலில் ரூ. 24 லட்சம் காணிக்கை

சிவன்மலை முருகன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ. 24 லட்சம் 29 ஆயிரத்து 698 காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.

காங்கயம்: சிவன்மலை முருகன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ. 24 லட்சம் 29 ஆயிரத்து 698 காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 7 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்நிலையில், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜே.முல்லை, திருப்பூா், அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயிலின் உதவி ஆணையா் மேனகா ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. இதில், மொத்தம் ரூ. 24 லட்சத்து 29 ஆயிரத்து 698 ரொக்கம், தங்கம் 97 கிராம், வெள்ளி இனங்கள் 860 கிராம் ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இவற்றை சிவன்மலை பாரத ஸ்டேட் வங்கியில், இக்கோயிலின் வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோயிலில் ஊழியா்கள், அா்ச்சகா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com