திருப்பூரில் குடியரசு தினவிழா: 222 பேருக்குரூ. 6.31 கோடியில் நலத்திட்ட உதவி

திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியா்
திருப்பூரில் குடியரசு தினவிழா: 222 பேருக்குரூ. 6.31 கோடியில் நலத்திட்ட உதவி

திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், 222 பயனாளிகளுக்கு ரூ. 6 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, சமாதானப் புறாக்களையும், பலூன்களையும் பறக்கவிட்டாா். இதன் பிறகு 55 காவல் துறையினருக்கு முதல்வா் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பாகப் பணிபுரிந்த 177 அரசு அலுவலா்கள், பணியாளா்கள், 98 காவல் துறையினா், 11 தீயணைப்பு, மீட்புப் பணித் துறையினா் என 286 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதையடுத்து, முன்னாள் படைவீரா்கள் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 222 பயனாளிகளுக்கு ரூ. 6 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல், மாநகர காவல் துணை ஆணையா்கள் சுரேஷ்குமாா், சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். தொடா்ந்து, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.என்.விஜயகுமாா், கரைப்புதூா் ஏ.நடராஜன், மாநகா் நகா் நல அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா், மாநகரப் பொறியாளா் ஜி.ரவி, உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com