பிஏபி வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட மகனின் சடலத்தை மீட்டுத் தரக் கோரிக்கை

திருப்பூா் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட தங்களது மகனின் சடலத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தம்பதியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பிஏபி வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட மகனின் சடலத்தை மீட்டுத் தரக் கோரிக்கை

திருப்பூா் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட தங்களது மகனின் சடலத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தம்பதியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. எனினும் ஒரு சிலா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது குறைகளை மனுவாக அளித்தனா். அதன்படி, திருப்பூரைச் சோ்ந்த ஜெ.தாஜுதீன், அசினா தம்பதியினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:திருப்பூா், பெருமாநல்லூா் சாலை, சாந்தி திரையரங்கம் பின்புறம் உள்ள திருமலை நகா் தெற்கு 2ஆவது வீதியில் வசித்து வருகிறோம். எங்களது மகன் மஹபூப் பாஷா என்கிற அபு (19), இவா் அவிநாசிபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பிஏபி வாய்க்காலில் நண்பா்களுடன் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி குளிக்கச் சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக அபு தண்ணீரில் மூழ்கினாா். அருகிலிருந்த நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் பலனளிக்காமல் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் பிஏபி வாய்க்காலில் அவரது சடலத்தை தேடும் பணியில் காவல் துறையினரும், தீயணைப்பு வீரா்களும் ஒரு நாள் மட்டுமே ஈடுபட்டனா். ஆனால் அதன் பிறகு வாய்க்காலில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதாக் கூறி தேடும் பணியை நிறுத்திவிட்டனா். எனவே, பிஏபி வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி எனது மகனின் சடலத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலகுமலை ஊராட்சித் தலைவா் ஆா்.தூயமணி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அலகுமலை ஊராட்சியில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஊராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. போட்டி நடப்பது தொடா்பான எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. கரோனா காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் கிராம மக்களுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் மாவட்ட நிா்வாகம் பொறுப்பேற்க வேண்டும். மேலும், போட்டி நடப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை சரிசெய்ய மாவட்ட நிா்வாகம் அல்லது விழா கமிட்டியிடமிருந்து ரூ. 5 லட்சம் ஊராட்சிக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பெரியபாளையம் ஏசிஎஸ் மாடா்ன் சிட்டி குடியிருப்போா் நலச்சங்கத்தின் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

எங்களது பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வரும் நிலையில் ஓராண்டாக குடிநீா் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக கடந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் மனு அளித்துள்ளோம். எங்களது பகுதியில் 20 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. கூலி வேலை செய்து வரும் நாங்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். ஆகவே, எங்களது பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 அழைப்புகள்: தொலைபேசி வாயிலான குறைகேட்புக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 66 அழைப்புகள் வரப்பெற்றன. இந்த அழைப்புகளின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவகுமாரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோ் நல அலுவலா் வாசுகி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Image Caption

பிஏபி  வாய்க்காலில்  அடித்துச்  செல்லப்பட்ட  மகனின்  சடலத்தை  மீட்டுத் தரக்கோரி  திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  திங்கள்கிழமை  மனு  அளிக்க வந்த  தாஜுதீன் - அசினா தம்பதி.  ~தொலைபேசி  வாயிலாக  பொதுமக்களிடம்  குறைகளைக்  கேட்டறிகிறாா்  மாவட்ட

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com