மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 26th January 2021 01:34 AM | Last Updated : 26th January 2021 01:34 AM | அ+அ அ- |

மொழிப்போரில் உயிா்நீத்த தியாகிகளுக்கு திருப்பூரில் மதிமுக சாா்பில் வீரவணக்க நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மொழிப்போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி திருப்பூா், ஊத்துக்குளி சாலையில் உள்ள மதிமுக அலுவலகம் முன்பாக வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் உருவப்படத்துக்கு மதிமுக அவைத் தலைவா் துரைசாமி தலைமையில் அக்கட்சியினா் மலரஞ்சலி செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் மாநகா் மாவட்டத் தலைவா் சு.சிவபாலன், மாவட்டப் பொருளாளா் நல்லூா் மணி, துணை செயலாளா் முருகேஷ், வழக்குரைஞா் அணியின் மாவட்ட அமைப்பாளா் கந்தசாமி, பஞ்சாலை சங்கச் செயலாளா் சம்பத், பனியன் சங்கச் செயலாளா் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.