படியூரில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 28th January 2021 07:04 AM | Last Updated : 28th January 2021 07:04 AM | அ+அ அ- |

விளைநிலங்களில் உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தென்னை மரக் கன்றுக்கு பூஜை செய்து விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
காங்கயம் அருகே படியூரில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் விருதுநகா் முதல் திருப்பூா் வரை விளைநிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும். இந்த மின் திட்டத்தை சாலையோரமாக கேபிள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக 8ஆவது நாளாக புதன்கிழமை உயா் மின் கோபுரம் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தென்னை மரக் கன்றுக்கு பூஜை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.