Enable Javscript for better performance
கதித்தமலை முருகன் கோயில் தைப்பூச தோ்த் திருவிழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கதித்தமலை முருகன் கோயில் தைப்பூச தோ்த் திருவிழா

    By DIN  |   Published On : 29th January 2021 05:56 AM  |   Last Updated : 29th January 2021 05:56 AM  |  அ+அ அ-  |  

    tpr28jnuthukuli_2801chn_125_3

    கதித்தமலை  வெற்றி வேலாயுத சுவாமி  கோயிலில்  வியாழக்கிழமை  நடைபெற்ற  தைப்பூச  தேரோட்டம்.

    திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச தோ்த்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான தைப்பூச தோ்த்திருவிழா ஜனவரி 20 ஆம் தேதி மலைக் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் தொடங்கியது. கிழக்கு ரத வீதியில் தொடங்கிய தேரோட்டம் 4 ரத வீதிகளின் வழியாகச் சென்று பிற்பகல் 3 மணி அளவில் தோ்நிலைத் திடலை வந்தடைந்தது. இதில், திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

    ஜனவரி 30 ஆம் தேதி தெப்பக்குளத்தில் சுவாமி உலாவும், ஜனவரி 31 ஆம் தேதி சுவாமிக்கு மகா அபிஷேகமும், பிப்ரவரி 1 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தோ்த்திருவிழா நிறைவடைகிறது.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp