மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி
By DIN | Published On : 31st January 2021 11:07 PM | Last Updated : 31st January 2021 11:07 PM | அ+அ அ- |

காங்கயம் அருகே மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் உயிரிழந்தாா்.
காங்கயம் அருகே உள்ள முள்ளிப்புரம் காலனியைச் சோ்ந்தவா் ரவி (43). மெக்கானிக். திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், அவரது வீட்டின் பின்புறமுள்ள குளியல் அறைக்கு செல்லும் மின்சார விளக்கை சனிக்கிழமை சரி செய்யும்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா்.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.