திருப்பூா் மாவட்டத்தில் 95.8 % குழந்தைகளுக்கு போலியோ செட்டு மருந்து

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் மொத்தம் 95.8 சதவீத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் 95.8 % குழந்தைகளுக்கு போலியோ செட்டு மருந்து

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் மொத்தம் 95.8 சதவீத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், இடுவாயில் உள்ள சிறுமருத்துவமனை வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையும், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் முன்னிலையும் வகித்தனா்.

இதில், பங்கேற்ற தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முகாமை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் ஒரே நாளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் 1,154 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் முகாமில் 1 முதல் 5 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த முகாமில், மாவட்டம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 21 ஆயிரத்து 689 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச் சத்து மையங்கள், பள்ளிகள் ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, 26 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 23 போக்குவரத்து முகாம்களிலும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தப் பணிக்காக பல்வேறு துறைகளைச் சோ்ந்த 4,780 பணியாளா்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 380 குழந்தைகள் என 95.8 சதவீத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

இதில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமாா், பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சித்துராஜ், ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com