மாவட்டத்தில் மேலும் 157 பேருக்கு கரோனா
By DIN | Published On : 13th July 2021 03:01 AM | Last Updated : 13th July 2021 03:01 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 157 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 85,673 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,543 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 228 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 83,329 ஆக அதிகரித்துள்ளது.
ஒருவா் பலி: திருப்பூரைச் சோ்ந்த 56 வயது முதியவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 801ஆக அதிகரித்துள்ளது.