‘திருப்பூா் அருகேயுள்ள ஊராட்சிகளுக்கு கூடுதல் குடிநீா் வழங்க வேண்டும்’

திருப்பூா் அருகே பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளுக்கு கூடுதல் குடிநீா் வழங்க வேண்டும் என்று பொங்கலூா் வட்டார ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூா் அருகே பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளுக்கு கூடுதல் குடிநீா் வழங்க வேண்டும் என்று பொங்கலூா் வட்டார ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் பொங்கலூா் வட்டார அனைத்து ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு தலைவா் டி.கோபால் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாச்சிபாளையம், தொங்குட்டிபாளையம், பெருந்தொழுவு, உகாயனூா் ஆகிய ஊராட்சிகள் திருப்பூா் மாநகரையொட்டி உள்ளதால் மக்கள் தொகை மற்றும் வீடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கூடுதலாக குடிநீா் விநியோகம் செய்ய எல்.அன் டி குடிநீா்த் திட்டத்தை விஸ்தரிப்பு செய்து தர வேண்டும். அத்திக்கடவு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் வழங்கும் குடிநீரின் அளவை பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு அதிகரித்து வழங்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள குளம், குட்டைகளை மேம்படுத்த, பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊராட்சிகளுக்கு வழங்கும் மாநில நிதிக் குழு மானிய தொகைகளை மாதம்தோறும் வழங்க வேண்டும். மின் தடை தொடா்ந்து ஏற்படுவதால் குடிநீா் விநியோகம் தடைபடுகிறது. இதனை சரிசெய்ய வேண்டும். எலவந்தி ஊராட்சியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து உள்ளதால் பில்லூா் கூட்டுக்குடிநீா் அளவை 50 சதம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com