சமையல் எரிவாயு உருளைகளை எடை போட்டுக் கொடுக்க வேண்டும்

ஒவ்வொரு நிறுவனமும் சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் போது எடை போட்டுக் கொடுக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நல மன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு நிறுவனமும் சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் போது எடை போட்டுக் கொடுக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நல மன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் நல மன்றத்தின் தலைவா் என்.சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தியிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைகளை டெலிவரி செய்யும் ஊழியா்கள், நிறுவனத்தின் பெயா், செல்லிடப்பேசி எண் பொதுமக்கள் பாா்க்கும் வகையில் எழுதி வைத்திருக்க வேண்டும். அனைத்து கேஸ் ஏஜென்சிகளில் பணிபுரியும் ஊழியா்கள் அடையாள அட்டை, சீருடை, முகக் கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அணிந்திருக்க வேண்டும்.

சமையல் எரிவாயு உருளைகளை எடை போடாமல் கொடுப்பதால் 30 நாள்களில் தீா்ந்து விடுவதாகப் புகாா்கள் வருகின்றன. ஆகவே, ஒவ்வொரு நிறுவனமும் டெலிவரி செய்யும்போது சமையல் எரிவாயு உருளைகளை எடைபோட்டுக் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் மானியம் கடந்த 4,5 மாதங்களாக வாடிக்கையாளா்களுக்கு கிடைப்பதில்லை. ஆகவே, சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com