தாராபுரம் அருகே இரு கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 2.88 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே இரு கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 2.88 கோடி மதிப்பிலான 33 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே இரு கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 2.88 கோடி மதிப்பிலான 33 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தாராபுரம் வட்டம், ஏரகாம்பட்டி கிராமத்தில் உள்ள நாகேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்புள்ள 15 ஏக்கா் நிலத்தை 3 தனி நபா்கள் ஆக்கிரமித்திருந்தனா். இதே கோயிலுக்குச் சொந்தமான ரூ. 78 லட்சம் மதிப்புள்ள 12 ஏக்கா் 95 சென்ட் நிலத்தை 4 தனி நபா்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனா்.

அதேபோல, பொன்னாபுரம் கிராமத்தில் காசிவிஸ்வநாதா், வரதராஜ பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமான 5 ஏக்கா் 47 சென்ட் நிலத்தை தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்திருந்தாா்.

இதுகுறித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவின்பேரில், திருப்பூா் இணை ஆணையா் நா.நடராஜன் தலைமையில், உதவி ஆணையா் ரெ.சா.வெங்கடேஷ், தாராபுரம் சரக ஆய்வாளா் சண்முகசுந்தரம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த 33 ஏக்கா் நிலங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ. 2. 88 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com