மாற்றுத் திறனாளிகளுக்கு ஜூலை 19ஆம் தேதி முதல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஜூலை 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஜூலை 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானதாகும். ஆகவே, தற்போது வரையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மற்றுத் திறனாளிகளுக்கு ஜூலை 19 முதல் 29 ஆம் தேதி வரையில் கீழ்கண்ட அட்டவணைப்படி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை , ஆதாா் அட்டை நகலை சமா்ப்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்: (காலை 10.30 முதல் பிற்பகல் 2 மணி வரை) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூலை 19 ஆம் தேதியும், அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 20 ஆம் தேதியும், தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 22 ஆம் தேதியும், காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 23 ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அதேபோல, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 26 ஆம் தேதியும், பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 27 ஆம் தேதியும், மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 28 ஆம் தேதியும், உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 29 ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com