உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாவட்டத்தில் வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்து வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வக்ஃபு நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

மேலும், 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், 18 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது எல்.எல்.ஆா்.சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 63 வக்ஃபு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அராபி ஆசிரியா்கள், மோதினாா், முஜாவா் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் பெற்றுகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94454-77854 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com