கொங்குநாட்டை தனி மாநிலமாக அமைக்கக் கோரிக்கை

கொங்குநாட்டை தனி மாநிலமாக அமைக்க வேண்டும் என்று மேற்குத் தமிழகம் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொங்குநாட்டை தனி மாநிலமாக அமைக்க வேண்டும் என்று மேற்குத் தமிழகம் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் பொங்கலூா் மணிகண்டன் தலைமை வகித்தாா். நாமக்கல் காா்த்திகேயன் வரவேற்றாா்.இக்கூட்டத்தில் கொங்கு மண்டலத்திலுள்ள 10 மாவட்டங்களைச் சோ்ந்த 120க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தனி மாநிலக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் கொங்கு நாடு என்று அழைக்கப்படும் 10 மாவட்டங்களையும், இன்னும் சில மாவட்டங்களையும் இணைத்து 90 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தனி மாநிலமாக அமைக்க வலியுறுத்திப் போராடவும், மக்களை ஒருங்கிணைக்கவும் மேற்குத் தமிழகம் கூட்டமைப்பு என்ற பொது அமைப்பைத் தொடங்கவும், அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளராக பொங்கலூா் மணிகண்டன் செயல்படுவது எனவும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னா் மேற்குத் தமிழகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பொங்கலூா் மணிகண்டன் பேசியதாவது:

கோவை, திருப்பூா், நாமக்கல், கரூா், நீலகிரி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலப் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி மாநிலமாக்கவும் அதற்கு மேற்குத் தமிழகம் என்று பெயரிடவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோாம்.

இதற்காக மேற்குத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தொழில் துறையினா், வழக்குரைஞா்கள், மாணவா்கள், இளைஞா்கள், விவசாய அமைப்புகள் என அனைவரையும் நேரில் சந்தித்து ஆதரவு கோர உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com