கிராமக் கோயில் திருவிழாவுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்

கிராமக் கோயில் திருவிழாக்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கிராமக் கோயில் திருவிழாக்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரககோட்டை சிவன் கோயிலில் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தொற்றால் மக்கள் மிகவும் பாதிப்படைந்தனா்.

மிகவும் இக்கட்டான சவால் நிறைந்த சூழ்நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மற்றும் மருத்துவா்களின் கடின உழைப்பால், பொதுமக்களிடையே கரோனா பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தி அவா்களின் பூரண ஒத்துழைப்புடன் கரோனா தொற்று எண்ணிக்கையை மாநிலம் முழுவதும் குறைத்துள்ளனா்.

தற்சமயம் தமிழக அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு அரசு வழிகாட்டுதலுடன் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனா் என்றாலும்.

கிராமங்களில் உள்ள மாரியம்மன், மாகா காளியம்மன், கருப்பராயன், உள்ளிட்ட கிராமக் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. எனவே கிராமக் கோயில் திருவிழாக்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com