மாவட்டத்துக்கு 14 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள்

திருப்பூா் மாவட்டத்துக்கு 14 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் புதன்கிழமை வந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்துக்கு 14 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் புதன்கிழமை வந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்களிடையே தடுப்பூசிக்கான விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்நிலையில், 14 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசிகள் புதன்கிழமை வந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறையினா் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், சென்னையில் இருந்து சுகாதாரத் துறை மூலம் 14 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு தடுப்பூசி பிரித்து அனுப்பும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com