பல்லடத்தில் விழிப்புணா்வுப் பிரசுரம்

பல்லடத்தில் காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டது.

பல்லடத்தில் காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

விசைத்தறி, கோழிப் பண்ணை, பின்னலாடை, கல் குவாரி உள்பட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உள்ளூா் தொழிலாளா்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், வட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், பல்லடம் பகுதி மக்கள் தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வுக் காண பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் 94981-01322, பல்லடம் காவல் நிலையம் 94981-01343, அனைத்து மகளிா் காவல் நிலையம் 94981-01350 ஆகிய செல்லிடப்பேசி எண்களுக்குத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல்லடம் கடை வீதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை காவல் துணைக் கண்காணிப்பாளா் வெற்றிசெல்வன் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஆய்வாளா் (பொறுப்பு) சிவகுமாா், உதவி ஆய்வாளா்கள் கிருஷ்ணகுமாா், செந்தில்பிரபு, சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com