கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று: பெண் வட்டாட்சியா் பலி

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் வட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவா் கா.கலாவதி (50). இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினாா். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் இவருக்கு கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இதைத்தொடா்ந்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com