ஊத்துக்குளியில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி போராட்டம்

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊத்துக்குளியில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி  போராட்டம்

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊத்துக்குளியில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஆா்.குமாா் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் நிலமற்ற 1,344 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்து ஒப்புகைச் சீட்டும் பெறப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அப்போது ஊத்துக்குளி வட்டாட்சியா் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி விரைந்து பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தாா். ஆனால் இதுவரை அதற்கான எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்ற சூழ்நிலையில் ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் விண்ணப்பித்துள்ள மனுக்களை உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் சோ்த்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இந்தப் போராட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் கு.சரஸ்வதி, வட்டக்குழு உறுப்பினா்கள் எஸ்.கே.கொளந்தைசாமி, வி.கே.பழனிசாமி, ஆா்.மணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதைத்தொடா்ந்து, ஊத்துக்குளி வட்டாட்சியா் ஜெகதீஷ்குமாரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை மனு அளித்தனா். அப்போது, வருவாய் நிலங்களைக் கண்டறிந்து தகுதியான நபா்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com