தொழிலாளா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

திருப்பூரில் உள்ள தொழிலாளா்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருப்பூரில் உள்ள தொழிலாளா்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சி, மாநகரக் காவல் துறை ஆகியன சாா்பில் தொழில் துறையினருக்கான கரோனா நோய்த் தடுப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம் பல்லடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா பேசியதாவது:

திருப்பூரில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்க வேண்டும். தொழிலாளா்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்களில் பணியாற்றும்போது கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு முன்னிலை வகித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி பேசுகையில், கரோனா நோய்த்தொற்று குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அலட்சியம் காட்டாமல் நாம் அனைவரும் கரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணா்வு வாகனத்தை மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி ஆகியோா் தொடக்கிவைத்தனா். இதில், மாநகராட்சி உதவி ஆணையா் கண்ணன், மாநகா் நல அலுவா் பிரதீப் வி.கிருஷ்ணகுமாா், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், சைமா சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com