ஆலயங்களைத் திறக்க மறுக்கும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

ஆடி தபசு உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகளுக்கு ஆலயம் திறக்க மறுக்கும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆடி தபசு உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகளுக்கு ஆலயம் திறக்க மறுக்கும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆடி மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் குறிப்பாக அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றுவது உள்பட பல்வேறு வகையான நிகழ்சிகள் நடைபெறும். அதேபோல ஆடி தபசு திருவிழாவும் பல கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கரோனாவால் தற்போது எந்தப் பண்டிகைகளையும் கொண்டாட அனுமதி கொடுக்காமல் தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இது போன்ற ஆன்மீகத் திருவிழாக்கள் தான் மக்களின் மனதில் நோய் பற்றிய பயத்தை போக்கி நம்பிக்கையை ஏற்படுத்தி அவா்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும். ஆகவே, ஆடி தபசு உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகளுக்கு ஆலயங்களைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com