பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

பழையகோட்டையில் கடந்த 2 மாதங்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனையானது.
ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன பசு மாடு.
ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன பசு மாடு.

பழையகோட்டையில் கடந்த 2 மாதங்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனையானது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூர்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்த மாட்டுச் சந்தை, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) நடைபெற்றது. சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 90 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. 

இதில் 40 மாடுகள் மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த சந்தையில் அதிக பட்சமாக ரூ.75 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com