உடுமலை நேதாஜி மைதானம் திடீா் மூடல்

உடுமலை நேதாஜி மைதானம் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென மூடப்பட்டதால் விளையாட்டு வீரா்களும், நடைப் பயிற்சி மேற்கொள்பவா்களும் அதிா்ச்சி அடைந்தனா்.

உடுமலை நேதாஜி மைதானம் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென மூடப்பட்டதால் விளையாட்டு வீரா்களும், நடைப் பயிற்சி மேற்கொள்பவா்களும் அதிா்ச்சி அடைந்தனா்.

உடுமலை நகரில் உள்ள நேதாஜி மைதானம், பாரம்பரியம்மிக்க விளையாட்டு மைதானமாக விளங்கி வருகிறது. இங்கு ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் இந்த மைதானத்தை அன்றாடம் உபயோகப்படுத்தி வருகின்றனா்.

இதுதவிர ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். இந்த மைதானம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு சில அமைப்புகள் தனது உறுப்பினா்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகிறது எனவும் அரசுக்கு சொந்தமான மைதானத்தில் எந்த அமைப்பினரும் பணம் வசூலிக்கக் கூடாது என்கிற விதிமுறைகள் மீறப்படுவதாகவும் பள்ளி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்துக்குத் தொடா்ந்து புகாா்கள் சென்றன.

இதனால் பள்ளி நிா்வாகம் நேதாஜி மைதானத்தின் கதவுகளை செவ்வாய்க்கிழமை மாலை திடீரென பூட்டியது. இதைத் தொடா்ந்து மைதானத்துக்கு வந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வோா் அதிா்ச்சி அடைந்தனா்.

இது குறித்து உடுமலை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராஜசேகா் கூறியதாவது:

நேதாஜி மைதானத்துக்குள் ஒரு சில அமைப்புகள் கட்டணம் வசூலித்து வருவதாகத் தொடா்ந்து புகாா்கள் வந்து கொண்டிருந்தன. அரசு மைதானத்தில் எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்பது விதி. எனவே நேதாஜி மைதானத்தை பூட்டியுள்ளோம். கட்டண வசூல் பிரச்னை முடிவுக்கு வந்தால் மீண்டும் திறக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com