‘தனி ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்க வேண்டும்’

தமிழகத்துக்கு என்று தனியாக ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று ஏஇசிபிசி தலைவரும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவருமான ஏ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழகத்துக்கு என்று தனியாக ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று ஏஇசிபிசி தலைவரும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவருமான ஏ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளாா்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை, ஏ.சக்திவேல் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

அப்போது அவா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா நெருக்கடி காலத்தில் பதவியேற்ற 2 மாதங்களில் தொழில் துறை சாா்பில் முதலீட்டாளா்களின் முதல் முகவரி மாநாட்டை நடத்தி ரூ. 28 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் 40 திட்டங்களையும், புதிய வேலை வாய்ப்பையும் கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கது. தமிழகத்துக்கு என்று தனியாக ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம் என்றதொரு தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆயத்த ஆடை, ஜவுளித்துறை உதிரிபாகங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்க வேண்டும். அதேபோல, தையல் இயந்திரப் பூங்கா மற்றும் கனரக ஜவுளி இயந்திரப் பூங்கா மற்றும் செயற்கை நூலிழை உற்பத்திக்கு என்று தனியாக பூங்கா அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com