‘மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்’

திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் திருப்பூா் தெற்கு மாநகர செயலாளா் ஜெ.ரமேஷ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் சிறு சிறு வேலைகளை செய்தும், பரமாரிப்பு உதவித் தொகைகளைப் பெற்றும் அன்றாட வாழ்க்கைத் தேவையைப் பூா்த்தி செய்து வருகின்றனா். இதனிடையே, கரோனா பொதுமுடக்கம் காரணமாக மாற்றுத் திறனாளிகள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், ரத்த அழுத்தம், சா்க்கரை, இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க முடியாத நிலையில் உள்ளனா். ஆகவே, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்புத் தொகையினை ஒன்று முதல் 5ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். கரோனா நிவாரணப் பொருள்களை மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக வழங்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளும் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com