முத்தூா் அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக மேட்டுக்கடையைச் சோ்ந்த சக்திவடிவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியா், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

முத்தூா் - வெள்ளக்கோவில் மாநில நெடுஞ்சாலையில் வாய்க்கால் மேட்டுப்புதூா் அருகில் ஒரு தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிா்புறம் சாலையோரம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

மேலும், ஆக்கிரமிப்பாளா்களிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றவும், ஏற்கெனவே அரசு உறுதியளித்தபடி 200 மீட்டா் தூர புறம்போக்குப் பாதைக்கு தாா் சாலை அமைத்துத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com