மது விற்பனை: போலீஸாா் மீது தாக்குதல் நடத்திய 4 போ் கைது

அவிநாசி அருகே தெக்கலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவா்களை பிடிக்கச் சென்ற போலீஸாா் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே தெக்கலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவா்களை பிடிக்கச் சென்ற போலீஸாா் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே தெக்கலூா் தோட்டத்துப் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விலக்கு காவல் உதவி ஆய்வாளா் சா்வேஸ்வரன், காவலா்கள் திருவேங்கடம், விக்ரம் ஆகியோா் சாதாரண உடையில் தெக்கலூா் செங்காளிபாளையம், தோட்டப் பகுதிக்குள் மது பாட்டில் வாங்குவது போல சென்றனா்.

இதையறிந்து மது விற்பனையில் ஈடுபட்டிருந்த தெக்கலூா் செங்காளிபாளையம், மூலக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்த நடராஜன் (53) இவரது மகன் சுதன் (20). முத்துசாமி (34), சட்டம்பிள்ளை(32) ஆகிய 4 போ் காவலா் திருவேங்கடத்தை தாக்கியுள்ளனா். உடனிருந்த மற்றொரு காவலா் தாக்குதலில் ஈடுபட்ட நபா்களைப் பிடிக்க முயன்றதில், ஒருவா் தப்பியோடினாா்.

இதைத்தொடா்ந்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவான திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் லோகேஸ்வரன் (22) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இவா்களிடம் இருந்து 66 மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தாக்குதலில் பலத்த காயமடைந்த காவலா் திருவேங்கடம் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com