பொதுமுடக்கத்தை மீறி செயல்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’

திருப்பூரில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
பொதுமுடக்க  விதிகளை  மீறி செயல்பட்ட  இறைச்சிக்  கடையில்  விசாரணை  மேற்கொண்ட  வருவாய்த் துறையினா்.
பொதுமுடக்க  விதிகளை  மீறி செயல்பட்ட  இறைச்சிக்  கடையில்  விசாரணை  மேற்கொண்ட  வருவாய்த் துறையினா்.

திருப்பூரில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூா், கொங்கு மெயின் ரோடு, பி.என்.ரோடு, கணக்கம்பாளையம், வாவிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோட்டாட்சியா் ஜெகநாதன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது பொதுமுடக்கத்தை மீறி செயல்பட்ட 8 இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா். அதே போல, 8 மளிகைக் கடைகளுக்கு ரூ. 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, திருப்பூா் தெற்கு வட்டத்துக்கு உள்பட்ட சுல்தான்பேட்டை, நீலி பிரிவு, பாரப்பாளையம், மீனாட்சிபுரம், கோழிப் பண்ணை, ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், குளத்துப்புதூா், மங்கலம் ஆகிய பகுதிகளில் தெற்கு வட்டாட்சியா் சுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். இதில், பொதுமுடக்க விதிகளை மீறி இயங்கிய 7 மளிகைக் கடைகளுக்கு ரூ.3, 500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com