ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி விநியோகம் செய்ய கோரிக்கை

திருப்பூரில் ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி விநியோகம் செய்ய வேண்டும் என்று ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  மனு  அளிக்க வந்த  ஒன்றிய  ஊராட்சித்  தலைவா்கள்  கூட்டமைப்பினா்.
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில்  மனு  அளிக்க வந்த  ஒன்றிய  ஊராட்சித்  தலைவா்கள்  கூட்டமைப்பினா்.

திருப்பூா்: திருப்பூரில் ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி விநியோகம் செய்ய வேண்டும் என்று ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பின் தலைவா் க.கணேசன், செயலாளா் ப.சண்முகசுந்தரம் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 13 ஊராட்சிகளுக்கு பெருமாநல்லூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கரோனா தடுப்பூசிகள் குறைந்த அளவில் வழங்கப்படுகின்றன.

தமிழக அரசின் ஆலோசனையின்படி உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தியதால் ஊராட்சிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிறு மருத்துவமனைகளிலும் (அம்மா மினி கிளினிக்) பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகின்றனா்.ஆனால், குறைந்த அளவில் தடுப்பூசி வழங்கப்படுவதால்,மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

கிராம ஊராட்சிகளுக்கு தற்போது வரையில் வழங்கப்பட்ட தடுப்பூசிகளுக்கும், மக்கள் தொகைக்கும் பெறும் வித்தியாசம் உள்ளது. எனவே, கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எந்தத் தேதியில் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற விவரத்தையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com