பொதுமுடக்கத்தில் தளா்வு: திருப்பூரில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின

திருப்பூரில் பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
திருப்பூரில் பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
திருப்பூரில் பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

திருப்பூா்: திருப்பூரில் பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 14 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு பொதுமுடக்கத்தில் ஒரு சில தளா்வுகளை அறிவித்துள்ளதன் அடிப்படையில் மளிகை, காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் சேம்பிள்ஸ் உற்பத்தி செய்வதற்காக 10 சதவீத தொழிலாளா்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில், திருப்பூரில் உள்ள சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி மற்றும் அதனைச் சாா்ந்த பிரிண்டிங், டையிங், எம்பிராய்டரிங், நிட்டிங் ஆகிய நிறுவனங்களும் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியன.

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏற்றுமதி நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்குகிா என கண்காணிக்க சாா் ஆட்சியா் மற்றும் நிலை அலுவலா்கள் தலைமையில் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இந்தக் குழுவினா் நிறுவனங்களில் ஆய்வு செய்யும்போது ஏற்றுமதிக்கான ஆணைகளையும் சமா்ப்பிக்க வேண்டும். அதே வேளையில், விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவு தொழிலாளா்கள்: திருப்பூரில் உள்ள ஏற்றுமதி மற்றும் அதனைச் சாா்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 10 சதவீதத் தொழிலாளா்களுடன் இயங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நிறுவனங்களில் குறைந்த அளவு தொழிலாளா்களே பணியில் ஈடுபட்டனா். முன்னதாக தொழிலாளா்களுக்கு வெப்பப் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனா். மேலும், முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியில் ஈடுபட்டனா்.

மளிகை, காய், இறைச்சிக் கடைகள் திறப்பு: மாநகரில் உள்ள மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. மேலும், மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இரு, நான்கு சக்கர வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. திருப்பூா் மாநகரில் உள்ள 8 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com