முகநூல் பதிவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாா்

வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஒரு நபரின் முகநூல் பதிவுக்கு எதிராக பொது நல அமைப்பினா் திங்கள்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஒரு நபரின் முகநூல் பதிவுக்கு எதிராக பொது நல அமைப்பினா் திங்கள்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

வெள்ளக்கோவிலைச் சோ்ந்த பத்திர எழுத்தா் ஒருவா் தனது முகநூல் பக்கத்தில் வெள்ளக்கோவிலில் செயல்பட்டு வரும் பொது நல அமைப்புகள், அறக்கட்டளைகள் அனைத்தும் சுய நலத்தோடு, சுய லாபத்துக்காகச் செயல்பட்டு வருவதாகப் பதிவு செய்திருந்தாா். இதற்கு வெள்ளக்கோவில் சமூக அமைப்பினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மேலும், இது குறித்து சமூக அமைப்பினா் கூறியதாவது:

வெள்ளக்கோவிலில் சமூக நல அமைப்புகள் சாா்பில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மரக் கன்றுகள் வளா்ப்பு, ரத்த தான முகாம்கள், ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். இந்த கரோனா காலத்தில் இலவச ஆம்புலன்ஸ், இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள் வசதி, நகராட்சி, ஊராட்சி, பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து முகக் கவசங்கள் வழங்குதல், தடுப்பூசி முகாம் விழிப்புணா்வுப் பணிகளைச் செய்து வருகிறோம். அவதூறான முகநூல் பதிவு எங்களின் சேவைகளைக் கொச்சைப் படுத்தியுள்ளது. இது தொடராமல் தடுக்க சம்மந்தப்பட்ட உயா் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com