கணக்கம்பாளையத்தில் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் கரோனா தடுப்பு பணிகளை அமைச்சர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கணக்கம்பாளையத்தில் அமைச்சர்கள் ஆய்வு
கணக்கம்பாளையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் கரோனா தடுப்பு பணிகளை அமைச்சர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) மு.பெ.சாமிநாதன் (செய்தித்துறை), என்.கயல்விழி (ஆதிதிராவிடர் நலத்துறை) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தல், சிகிச்சை, பரிசோதனை மையம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.

இதேபோல கரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் வீரக்குமார், ஊராட்சி செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com