ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 11th June 2021 05:41 AM | Last Updated : 11th June 2021 05:41 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி
வெள்ளக்கோவில் குமாரவலசு ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் கரோனா வினைகளை அகற்ற சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் விரைவில் விடுபட்டு, கஷ்டங்கள் நீங்கி நலமுடன் வாழ ஐயப்ப சுவாமி அருள்புரிய வேண்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், கலசாபிஷேகம், தன்வந்திரி ஹோமம், மகாலட்சுமி சுதா்சன ஹோமம், சாஸ்தா ஹோமம் மற்றும் தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளுக்கு உள்பட்டு கோயில் நிா்வாகிகள் மற்றும் அா்ச்சகா்களால் மட்டும் இந்த சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.