சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்
By DIN | Published On : 11th June 2021 05:43 AM | Last Updated : 11th June 2021 05:43 AM | அ+அ அ- |

காங்கயம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு 5,000 கரோனா தடுப்பு உபகரணங்களை காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தனது சொந்த செலவில் வியாழக்கிழமை வழங்கினாா்.
காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காங்கயம்-சத்யா நகா், பச்சாபாளையம், நத்தக்காடையூா், சாவடிப்பாளையம் ஆகிய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு 5,000 முகக் கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் முரளி, மோகனா, விஜயலட்சுமி, சௌமியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.