பிகாா், அஸ்ஸாமில் இருந்து தொழிலாளா்களை ஏற்றி வந்த 3 பேருந்துகள் பறிமுதல்

வட மாநிலங்களில் இருந்து காங்கயத்துக்கு கூலி தொழிலாளா்களை ஏற்றி வந்த 3 பேருந்துகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வட மாநிலங்களில் இருந்து காங்கயத்துக்கு கூலி தொழிலாளா்களை ஏற்றி வந்த 3 பேருந்துகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதியில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலைகள், நூற்பாலைகள், தேங்காய் உலா் களங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மறைமுகமாக இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளா்கள் வடமாநிலங்களில் இருந்து சில இடைத்தரகா்கள் மூலம் சட்டத்துக்குப் புறம்பாக தொழிற்சாலைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனா்.

இந்நிலையில்,காங்கயம், சென்னிமலை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தேங்காய் உலா் களத்துக்கு பிகாா் மாநிலத்தில் இருந்து 63 தொழிலாளா்களை கூட்டி வந்த சொகுசுப் பேருந்தை காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி தலைமையிலான வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா். மேலும், அதில் வந்த தொழிலாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினா்.

இதேபோல, அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தேங்காய் உலா் களத்துக்கு 42 தொழிலாளா்களையும், அகஸ்திலிங்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தேங்காய் உலா் களத்துக்கு 52 தொழிலாளா்களை ஏற்றி வந்த 2 பேருந்துகளையும் வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த மூன்று பேருந்து உரிமையாளா்கள் மீதும் காவல்துறையில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமி கூறியதாவது: காங்கயம் பகுதியில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் பணிபுரிபவா்கள் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், கரோனா பொதுமுடக்கத்தால், தற்போது தொழிலாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்குவதற்காக தற்போதுள்ள பேரிடா் சூழலையும் பொருட்படுத்தாமல், ஆலை அதிபா்கள் விதிகளுக்குப் புறம்பாக தொழிலாளா்களை அழைத்து வருவதால், இப்பகுதியில் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com