முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் கரோனா பரிசோதனை
By DIN | Published On : 12th June 2021 10:38 PM | Last Updated : 12th June 2021 10:38 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் திங்கள்கிழமை கரோனா பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சிகளிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நூறு வீட்டுக்கு ஒரு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் பொதுமக்களின் உடல்நிலைக் குறித்து புள்ளி விவரங்கள் சேகரிப்பதற்க்காக,உள்ளுரிலே கரோனா பரிசோதனை முகாம்களை அமைத்துள்ளனா்.
நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்தவா்கள் பயன்பெறும் வகையில், தாசவநாயக்கன்பட்டி காமாட்சியம்மன் திடலில் இலவசப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெறுமாறு ஊராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.