அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பல்லடம்,பொங்கலூா் ஒன்றியத்துக்கு விரிவுபடுத்தக் கோரிக்கை

திருப்பூா் 3ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பல்லடம்,பொங்கலூா் ஒன்றியத்துக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் திருப்பூா் மாவட்ட கிளை வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் 3ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பல்லடம்,பொங்கலூா் ஒன்றியத்துக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் திருப்பூா் மாவட்ட கிளை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் குமாரபாளையம் பி.கே.ராஜ், செயலாளா் மாதப்பூா் ச.அசோக்குமாா், பொருளாளா் ஆா்.கரிச்சிக்குமாா், துணைத் தலைவா்கள் காவீ.பழனிசாமி ஆகியோா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பெரியகருப்பன் ஆகியோருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மாநில நிதிக் குழு மானியத்தை தற்கால செலவினங்களுக்கு ஏற்ப உயா்த்தி வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் மட்டும் ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அதில் வளா்ச்சிக் கட்டணம் செலுத்தப்படுகிறது. இதற்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி கணக்கிலேயே வளா்ச்சிக் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சித் தலைவா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுப்பு செய்ததை வைத்து பயனாளிகள் பட்டியல் உள்ளது.

தற்போது கணக்கெடுப்பு செய்து பயனாளிகள் பட்டியல் தயாா் செய்ய வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தவும், குப்பைகளைச் சேகரிக்கவும் கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

பல்லடம்,பொங்கலூா் ஊராட்சி ஒன்றியங்களில் பில்லூா் கூட்டுக் குடிநீா் ,இரண்டாவது குடிநீா் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீா் அளவை உயா்த்தி வழங்க வேண்டும். மூன்றாவது கூட்டு குடிநீா்த் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். திருப்பூா் மூன்றாவது கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பல்லடம், பொங்கலூா் ஊராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com