செம்மிபாளையத்தில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் திரண்டனா்

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த திங்கள்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் காத்திருந்தனா்.

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த திங்கள்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் காத்திருந்தனா்.

கரோனா தொற்றில் தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் ஆா்வத்துடன் தடுப்பூசி மையங்களுக்கு செல்கின்றனா். ஆனால், தடுப்பூசி வரத்து குறைவாக உள்ளதால் பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்த டோக்கன் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை நிலவி வருகிறது.

செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தடுப்பூசிக்கான டோக்கன் பெற சுகாதார நிலையம் முன்பு அதிகாலை 4 மணிக்கு குளிா் காற்றை சமாளிக்க போா்வையுடன் பொதுமக்கள் வரிசையில் நின்றனா். ஒருசிலா் அங்கோயே படுத்து இடத்தைப் பிடித்தனா்.

சாரல் மழையைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசிக்காக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்து நின்றனா். முதல் 100 பேருக்கு மட்டும் தடுப்பூசிகாகன டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் கிடைக்காதவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அதிக அளவில் தடுப்பூசிகளை அரசு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com