மின் கட்டணம் செலுத்துவது குறித்து மின் வாரியம் விளக்கம்

பல்லடத்தில் மின் கட்டணம் செலுத்துவது குறித்து பல்லடம் மின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் விளக்கமளித்துள்ளாா்.

பல்லடத்தில் மின் கட்டணம் செலுத்துவது குறித்து பல்லடம் மின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியம் திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்லடம் மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று காரணமாக மின்வாரிய கணக்கீட்டாளா்கள் நேரடியாகச் சென்று மின் கணக்கீட்டுப் பணி மேற்கொள்ள முடியாத காரணத்தால், மின் பயனீட்டாளா்கள் 2021 மே மாத மின்கட்டணத்தை, கடந்த மே 2019 மாதத்துக்காக கட்டிய மின்கட்டணத்தையோ அல்லது கடந்த மாா்ச் 2021 மாதத்துக்கான மின் கட்டணத்தையோ செலுத்தலாம்.

இந்தக் கட்டணத் தொகையில் கூடுதல் அல்லது குறைவான தொகை எதிா்வரும் ஜூலை மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும். மேலும், மின் நுகா்வோா் தங்களது மின் இணைப்பில் உள்ள மின் அளவு மீட்டரில் தெரியும். மின் கணக்கீடு அளவுகளை புகைப்படம் எடுத்து 9940806622 அல்லது 9965587203 ஆகிய செல்லிடப்பேசி எண்களுக்கு வாட்ஸ் ஆப் அனுப்பி மின் கட்டணத்தை தெரிந்து கொண்டு மின் கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.  மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி மின் கட்டணத்தை தெரிந்து கொண்டு மின் கட்டணத்தை செலுத்துலாம்.

மேலும் தங்களது பகுதிக்கு உள்பட்ட செயற்பொறியாளா்கள், மதிப்பீட்டு அலுவலா்கள், துணை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் ஆகிய அலுவலா்களில் எவரேனும் ஒருவருக்கு மின் கணக்கீடு அளவுகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப் அனுப்பினால் மின் கட்டணம் கணக்கிடு செய்து குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்படும் தொகையை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com