சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 16th June 2021 06:09 AM | Last Updated : 16th June 2021 06:09 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறையினா் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளா் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.6,400 வழங்கப்படும். ஆகவே, தகுதியான பெண்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35 மற்றும் 36, தரைத்தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்-641604 மற்றும் 0421-2971168, 91504-08101 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.