வெள்ளக்கோவிலை தனி தாலுகாவாக மாற்றும் பணி தொடக்கம்
By DIN | Published On : 20th June 2021 12:19 AM | Last Updated : 20th June 2021 12:19 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை தனி தாலுகாவாக உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருப்பூா் மாவட்டத்தில், பல்லடம், அவிநாசி, உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய தாலுகாக்கள் இருந்தன. இவற்றுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மறு சீரமைப்பில் திருப்பூா் தாலுகா பிரிக்கப்பட்டு திருப்பூா் வடக்கு, தெற்கு, இவற்றுடன் மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய புதிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டன.
அப்போதே மாவட்டத்தில் அதிக பரப்பளவுக் கொண்ட தாராபுரம், காங்கயம் தாலுகாக்களைப் பிரித்து வெள்ளக்கோவிலை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.ஆனால் நடக்கவில்லை.
தற்போது , காங்கயம் தொகுதியில் திமுகவைச் சோ்ந்த வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் வெற்றி பெற்றதையடுத்து இதற்கான கணக்கெடுப்புப் பணிகளை வருவாய்த் துறையினா் தொடங்கியுள்ளனா்.